அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் ராஷ்மிகா
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாக உள்ள ஏஏ22xஏ6 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.;
சென்னை,
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஏஏ22xஏ6 திரைப்படம், பான் இந்திய அளவில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் மிர்னாள் தாக்கூர் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் இப்படத்திலிருந்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுடன் இணைந்து மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 1 மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.