கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

சதீஷ் இயக்கிய இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.;

Update:2025-08-04 12:45 IST

சென்னை,

நடிகர் கவின் 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வெளியான 'லிப்ட்' , 'டாடா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக கவின் நடித்திருந்த 'பிளடி பெக்கர்' திரைப்படம் கலவையான வரவேற்பையே பெற்றது.

இதற்கிடையில் கவின் 'கிஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்கிய இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 18ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்