"ரெட்ரோ" படத்தின் "எதற்காக மறுபடி" வீடியோ பாடல் வெளியீடு

‘ரெட்ரோ’ படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூலை கடந்துள்ளது.;

Update:2025-05-11 21:51 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.104 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த படத்தினை ஸ்டோன் பென்ஞ்சு மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. காதல், ஆக்சன் கதையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சூர்யா 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது. இது தவிர படத்தில் இடம்பெற்ற சிங்கிள் ஷாட் காட்சிகளும், கனிமா பாடலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற 'எதற்காக மறுபடி' வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விவேக் வரிகளில் அனந்து பாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்