'சுபம்'-ரசிகர்களை யூகிக்க வைக்கும் சமந்தா
'சுபம்' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.;
சென்னை,
விரைவில் வெளியாகவுள்ள ஹாரர் காமெடி படமான 'சுபம்' மூலம் நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை எதிர்பார்த்து சமந்தா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய சமந்தா, "டிரெய்லரைப் பார்த்த பிறகு 'சுபம்' ஒரு ஹாரர் காமெடி படமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், அதையும் தாண்டி படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன' என்றார். சமந்தாவின் இந்த பேச்சு ரசிகர்களை படம் குறித்து யூகிக்க வைத்துள்ளது.