''அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம்''...ஷில்பா ஷெட்டியை கவர்ந்த நடிகர் யார்?
பாசில் இயக்கிய 'நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு' என்ற மலையாளப் படம் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்று ஷில்பா கூறினார்.;
திருவனந்தபுரம்,
'கேடி-தி டெவில்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷில்பா ஷெட்டி, மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை என்றும், எப்போதாவது அந்தத் துறையில் பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். பாசில் இயக்கிய 'நோக்கேத்ததூரது கண்ணும் நட்டு' என்ற மலையாளப் படம் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று என்றும் அவர் கூறினார்.
'கேடி-தி டெவில்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் கூறுகையில், "இந்தி சினிமாவைத் தவிர, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளேன். மலையாளத்திலும் சில வாய்ப்புகள் வந்தன, ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை, ஏனென்றால் எனக்கு பயம்.
நான் இங்கு நடித்தால் என் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஒருநாள் கண்டிப்பாக நடிப்பேன் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்," என்றார்.
பிரேம் இயக்கி இருக்கும் 'கேடி-தி டெவில்' எ படத்தில் துருவா சர்ஜா, ரீஷ்மா நானையா, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், சஞ்சய் தத், பூனம் ஜாவர், ஷில்பா ஷெட்டி மற்றும் நோரா பதேஹி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.