ஏஐ புகைப்படங்களுடன் வெளியாகும் போலி விளம்பரங்கள் குறித்து எச்சரித்த ஸ்ரேயா கோஷல்

ஷேக் செய்யப்பட்ட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டுள்ளது.;

Update:2025-04-08 16:38 IST

மும்பை,

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடி இந்திய அளவில் பிரபலமானவர் ஸ்ரேயா கோஷல். தமிழில் மட்டும் 150-க்கும் அதிகமான படங்களில் பாடியுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தளம், கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தனது எக்ஸ் தளம் ஷேக் செய்யப்பட்டது. அதனை மீட்க முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் எக்ஸ் பக்கம் சரியாகி விட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் திரும்பி வந்துவிட்டேன்! இனி அடிக்கடி பேசுவேன் எழுதுவேன். ஷேக் செய்யப்பட்ட எனது எக்ஸ் பக்கம் பல போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. தற்போது எல்லாம் சரியாகிவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "என்னைப் பற்றி ஏஐ புகைப்படங்களுடன் வெளியாகும் போலி விளம்பரங்களை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார் ஸ்ரேயா கோஷல். மேலும் அவையெல்லாம் மோசடிக்கு வழிவகுப்பவை. தயவு செய்து அந்த விளம்பரங்களை ரிப்போர்ட் செய்யுங்கள். அதை நிறுத்த எனக்கு அதிகாரம் இல்லை. நான் என்னால் முடிந்த வரை முயற்சித்தேன். எக்ஸ் குழு இந்த பிரச்சினையை விரைவில் சரி செய்வார்கள் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்