என்னை சிலர் புறக்கணிக்கிறார்கள் - நடிகர் கலையரசன் வேதனை

இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கலையரசன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-10 19:04 IST

சென்னை,

'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்காரன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது கலையரசன் கதாநாயகனாக 'டிரெண்டிங்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கிய இப்படம் வருகிற 18-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் கலையரசன் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த் திரையுலகில் சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது என்று பேசியுள்ளார். அதாவது, "தமிழ் திரைத் துறையில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. சிலர் என்னை புறக்கணிக்கிறார்கள். என்னை நடிக்க அழைப்பதற்கு யோசிக்கிறார்கள்" என்று பேசியுள்ளார். நடிகர் கலையரசனின் இந்த கருந்து திரையுலக வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்