’ஆர்யன் படத்தின் சில காட்சிகள் அந்த படத்திலிருந்து ஈர்க்கப்பட்டது’ - விஷ்ணு விஷால்
'ஆர்யன்' திரைப்படத்தை பிரவீன் கே இயக்கி உள்ளார்.;
சென்னை,
ஆர்யன் படம் வருகிற 31-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், புரமோஷன் பணிகளில் விஷ்ணு விஷால் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்திய நடந்த ஒரு நேர்காணலில், தனக்குப் பிடித்த மலையாளத் திரைப்படங்களை அவர் கூறினார்.
அப்போது மம்முட்டியின் கண்ணூர் ஸ்குவாடும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றது. "கண்ணூர் ஸ்குவாட் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்த ஒரு படம். உண்மையில், ஆர்யனின் சில காட்சிகள் கண்ணூர் ஸ்குவாடிலிருந்து ஈர்க்கப்பட்டவை," என்றார்.
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கிய கண்ணூர் ஸ்குவாட் 2023-ல் வெளியானது. விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்ற இந்தப் படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. .
'ஆர்யன்' திரைப்படத்தை பிரவீன் கே இயக்கி உள்ளார். இதில் விஷ்ணு விஷால் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.