நிஷாந்த் ரூசோ நடிக்கும் "சொட்ட சொட்ட நனையுது" படத்தின் பாடல் வெளியீடு

கதாநாயகனின் முகத்தோற்ற குறைபாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சொட்ட சொட்ட நனையுது’ படத்தில் இடம்பெற்ற ‘மந்திர கண்ணாலே’ வீடியோ பாடல் வெளியானது.;

Update:2025-07-26 19:07 IST

இயக்குநர் நவீத் எஸ். பரீத் இயக்கத்தில் உருவாகி உள்ள 'சொட்ட சொட்ட நனையுது' திரைப்படத்தில் நிஷாந்த் ரூசோ, ராஜா இளங்கோவன், வர்ஷினி வெங்கட், ஷாலினி, ஆனந்த் பாண்டி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரயீஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சித் உன்னி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அட்லர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற 'மந்திர கண்ணாலே' எனத் தொடங்கும் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் நேசன் எழுத, பின்னணி பாடகர் ஜிதின் ராஜ் மற்றும் பின்னணி பாடகி நேகா வேணுகோபால் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் கதாநாயகனின் முகத் தோற்றத்தில் உள்ள குறைபாட்டை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்