திரைத்துறை நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்த சூர்யா - ஜோதிகா!

நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.;

Update:2025-03-30 15:42 IST

சென்னை,

ஜோதிகா 1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இந்தி படங்களில் அவர் நடிக்கவில்லை. தமிழில் 1999-ல் நடித்த வாலி படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் படங்களிலேயே நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

'36 வயதினிலே' படம் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் பாலிவுட்டில் அவரது நடிப்பில் வெளியான 'சைத்தான்' மற்றும் 'ஸ்ரீகாந்த்'ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் தற்போது 'டப்பா கார்ட்டெல்' என்ற வெப்சீரிஸ் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஜோதிகா- சூர்யா திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இன்றளவும் இருவரும் குறையாத காதலுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஜோடி பலருக்கு ரோல்மாடலாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.

சூர்யா - ஜோதிகா வீட்டு பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகர் சூர்யா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.சூர்யா வீட்டு விருந்தில் கலந்துகொண்ட நடிகைகள் அனைவரும், அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி உணவும் அருமையாக இருந்ததாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய சூர்யா - ஜோதிகா இருவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்