11 ஆண்டுகளை நிறைவு செய்த "வேலையில்லா பட்டதாரி" படம்

தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் வெளிவந்து இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.;

Update:2025-07-18 13:09 IST

சென்னை,

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் வேலையில்லா பட்டதாரி. இது நடிகர் தனுஷின் 25வது படமாகும்.

இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சரண்யா, சமுத்திரக்கனி, அமலா பால், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் பட்டதாரி இளைஞர்களின் பிரதிபலாமாக இப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார் தனுஷ்.

ஆக்சன், அம்மா செண்டிமெண்ட், பாடல்கள், எமோஷனல் காட்சிகள், நகைச்சுவை என படத்தில் எந்த இடத்திலும் தொய்வு இருக்காது. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வெளிவந்து இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்