காதலில் விழுந்த 'தி கோட்' பட நடிகை

நடிகை மீனாட்சி சவுத்ரி பிரபல நடிகரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.;

Update:2025-09-06 23:51 IST

விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கு திரை உலகில் குண்டூர்காரம், லக்கி பாஸ்கர் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். அடுத்ததாக சிரஞ்சீவியுடனும் பிரபல இயக்குனர் வசிஷ்ட்மல்லிடி இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இச்சா வாகனமுலு துலாராடு என்ற படத்தில் மீனாட்சி சவுத்ரியும் சுஷாந்தும் ஒன்றாக நடித்திருந்தனர். படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் சமீபத்தில் விமான நிலையத்தில் ஒன்றாக காணப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் மீனாட்சி சவுத்ரி முகத்தை மூடியபடியும் சுஷாந்த் டிராலியை தள்ளியபடியும் சென்றுள்ளார். வீடியோ காட்சிகளால் உண்மையில் இவர்கள் உறவில்தான் இருக்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது.

ஏற்கனவே இருவரது காதல் விவகாரம் செய்தியாகி வரும் நிலையில் சுஷாந்த் எனக்கு ஒரு நல்ல நண்பர் அதற்கு மேல் எதுவும் இல்லை என மீனாட்சி சவுத்ரி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரும் விமான நிலையத்தில் ஜோடியாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்