ஜி.வி.பிரகாஷின் “ஹாப்பி ராஜ்” படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
‘ஹாப்பி ராஜ்’ படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்குகிறார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான படம் 'பிளாக்மெயில்'. மு.மாறன் இயக்கிய இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் ‘ஹாப்பி ராஜ்’ புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கி வருகிறார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இதில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், ‘ஹாப்பி ராஜ்’ படத்தின் அறிமுக புரோமோ வெளியானது. இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கெளரி பிரியா நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.