கவர்ச்சியில் குதிக்க தயாராகும் ‘மாஸ்டர்' பட நடிகை
நடிகை கவுரி கிஷன் தற்போது ‘அதர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார்.;
கேரளத்து தேசத்தில் பிறந்து தமிழ் சினிமாவுக்கு வந்த அழகான நடிகைகளில் கவுரி கிஷனும் ஒருவர். ‘96' படத்தில் அவர் நடித்த ஜானு கதாபாத்திரம் அவருக்கு பெரியளவில் பெயரை ஏற்படுத்தி தந்தது. ‘மாஸ்டர்', ‘கர்ணன்', ‘அடியே', ‘ஹாட் ஸ்பாட்', ‘போட்' என பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடித்து கொண்டிருக்கிறார்.
இவரது நடிப்பில் ‘அதர்ஸ்' என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது.குடும்ப குத்துவிளக்காகவே ஜொலித்து வந்த கவுரி கிஷன், தற்போது கவர்ச்சியாக நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம். அதன் ஒருகட்டமாக லேசான கவர்ச்சி காட்டும் தனது புகைப்படங்களை அவர் வெளியிட தொடங்கியுள்ளார்.கவர்ச்சியாக நடிக்கவும் ஓரிரு நிபந்தனைகளை விதிக்கிறாராம். வேண்டுவதை செய்துகொடுத்தால் வேண்டியதை குறைவில்லாமல் செய்து தருவாராம் கவுரி கிஷன்.