‘ஆர்யன்’ படத்தின் 2-வது பாடல் வெளியானது
இப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ஆர்யன்’. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் மானசா சவுத்ரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘ஆர்யன்’ படத்தின் முதல் பாடலான ‘கொல்லாதே கொள்ளை அழகாலே’ சமீபத்தில் வெளியானநிலையில், தற்போது 2-வது பாடல் வெளியாகி இருக்கிறது.
'அழகியலே' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை கிப்ரான், அபி வி மற்றும் பிரிட்டா ஆகியோர் பாடியுள்ளனர்.