எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கும் "கிராண்ட் பாதர்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இப்படத்தின் மூலமாக ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.;
தன்னுடைய குணசித்திர நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். அண்மையில் 'பார்க்கிங்' படத்துக்காக சிறந்த துணை துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார் எம்.எஸ்.பாஸ்கர்.
இவர் தற்போது 'கிராண்ட் பாதர்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி, அதில் எம்.எஸ்.பாஸ்கருக்கு பேரனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டி ஸ்டோரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் மூலமாக ப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.
எம்.எஸ்.பாஸ்கர், ப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோருடன் ஸ்மீகா, அருள் தாஸ், முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார்.
காமெடி கலந்த ஹாரர் பேண்டஸி படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.