நடிகர் தர்ஷன் இருக்கும் சிறை அறையில் டி.வி. பொருத்தம்!

கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறை அறையில் டி.வி. பொருத்தப்பட்டுள்ளது.;

Update:2025-12-11 08:10 IST

பெங்களூரு,

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நடிகர் தர்ஷன் தலையணை, படுக்கை விரிப்பு கேட்டும், அதனை அதிகாரிகள் கொடுக்க மறுத்தனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தலையணை, படுக்கை விரிப்பை பெற்றார்.

இந்த நிலையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ள அறையில் நேற்று டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. லட்சுமண் கோரிக்கை பேரில் அறையில் டி.வி. பொருத்த சிறை நிர்வாகத்திற்கு கடந்த 3-ந் தேதியே கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. கோர்ட்டு உத்தரவின் பேரில் லட்சுமண் அடைக்கப்பட்டுள்ள அறையில் டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. அங்கு தான் தர்ஷனும் இருப்பதால், அவருக்கு நேற்று முதல் டி.வி.பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்