100 கோழி முட்டைகளால் அடிவாங்கிய ஸ்டார் ஹீரோ...யார் தெரியுமா?

திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக அவர் 100 கோழி முட்டைகளால் அடிவாங்கி இருக்கிறார்.;

Update:2025-11-07 19:07 IST

சென்னை,

சில ஹீரோக்கள் கதாபாத்திரத்திற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். டூப்கள் இல்லாமல் ஆபத்தான காட்சிகள், சண்டைக்காட்சிகளை கூட முயற்சிப்பார்கள்.

ரசிகர்களுக்காக எந்த சிரமத்தையும் தாங்கிக் கொள்கிறார்கள். பாலிவுட் நடிகர் அக்சய் குமார் அப்படிப்பட்ட ஒரு ஹீரோதான். அவர் எந்த வேடத்திலும் நடிக்கக்கூடிய ஒரு சிறந்த நடிகர்.

திரைப்படத்தில் ஒரு பாடலுக்காக அவர் 100 கோழி முட்டைகளால் அடிவாங்கி இருக்கிறார். நடன இயக்குனர் சின்னிபிரகாஷ் சமீபத்திய பேட்டியில் இதைத் தெரிவித்தார்.

Advertising
Advertising

அவர் கூறுகையில், "அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு சில ஹீரோக்களில் அக்சயும் ஒருவர். அவர் ஒரு கதாபாத்திரத்திற்காக 100 சதவீதம் உழைப்பார். நான் அவருடன் சுமார் 50 பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறேன். எவ்வளவு கடினமாக ஸ்டெப்பாக இருந்தாலும் அவர் முயற்சிப்பார், என்னை ஒருபோதும் ஸ்டெப்களை மாற்றச் சொன்னது இல்லை.

'கிலாடி' படத்தில் ஒரு பாடலுக்காக அக்சய் குமார் 100 கோழி முட்டைகளால் அடிவாங்கினார் . அந்த காட்சியில், பெண்கள் அவரைச் சுற்றி கூடி முட்டைகளால் அடித்தார்கள். அவர் மிகவும் எளிமையானவர் அக்சயைப் போல கடினமாக உழைக்கும் ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை" என்றார். அக்சய் குமார் நடித்த 'கிலாடி" திரைப்படம் 1992 இல் வெளியானது.

 

Tags:    

மேலும் செய்திகள்