'மீசைய முறுக்கு 2' படத்தில் நடிக்க மறுத்த தேவா...ஏன் தெரியுமா?

ஹிப் ஹாப் தமிழா ஆதி மீசையமுறுக்கு 2 கதையை தன்னிடம் சொன்னதாக தேவா கூறினார்.;

Update:2025-09-29 06:50 IST

சென்னை,

மீசையமுறுக்கு 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தேவா கூறி இருக்கிறார். ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய தேவா இதனை தெரிவித்தார். அவர் கூறுகையில்,

"ஹிப் ஹாப் தமிழா ஆதி மீசையமுறுக்கு 2 கதையை என்னிடம் சொல்லி, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னார். அது ஒரு சூப்பர் ஸ்கிரிப்ட். ஆனால் நான் கச்சேரியில் பிஸியாக இருக்கிறேன், நடிப்பதில் ஆர்வமில்லை, அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்தேன்" என்றார்.

இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான ‘மீசைய முறுக்கு’ மூலம் கதாநாயகன், இயக்குனர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்க இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் ஆதி மேற்கொள்கிறார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்