’இந்த 3 விஷயங்களுக்கு எல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ’ - தீபிகா படுகோன்

"ஸ்பிரிட்" படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோன், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.;

Update:2025-11-15 14:10 IST

சென்னை,

8 மணி நேர வேலை காரணமாக சந்தீப் ரெட்டி வாங்கவின் "ஸ்பிரிட்" படத்திலிருந்து விலகிய தீபிகா படுகோன், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு புதிய நேர்காணலில் தீபிகா ,திரைப்படத் துறையிலும் 8 மணி நேர வேலையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் அனைவரும் தூக்கம், உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தற்போது, ​​தீபிகா படுகோன் இரண்டு பெரிய படங்களில் நடித்து வருகிறார்: ஷாருக்கானின் "கிங்" மற்றும் அல்லு அர்ஜுன் - அட்லியின் எஎ22xஎ6(AA22xA6).

Tags:    

மேலும் செய்திகள்