'தக் லைப்' பட விவகாரம்...கமலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கமலுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறியிருக்கிறது.;

Update:2025-06-04 11:33 IST

பெங்களூரு,

சமீபத்தில் நடந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை இப்போது வெளியிடவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியைத் தள்ளி வைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஒரு வார கால அவகாசம் தேவை என்றும் கமல் தரப்பினர் கேட்டனர்.

நாளை இப்படம் வெளியாக உள்ளநிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கமலுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறியிருக்கிறது.

"கர்நாடகாவிலும் கமல் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆதலால், 'தக் லைப்' படத்தை இங்கு திரையிட விரும்புகிறோம். கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி 'தக் லைப்' படத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்" என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்