“டூரிஸ்ட் பேமிலி” இயக்குநர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நடிகை அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.;

Update:2025-10-13 18:52 IST

எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இவர் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக மோனிஷா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார்.


இந்த படத்தின் பூஜை கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது. இதில் சவுந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ்ராஜ், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், சசிகுமார், ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 45 நாட்களில் இப்படம் நிறைவடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்