சவுந்தர்யா ரஜினிகாந்த் படத்தில் கதாநாயகனாகும் “டூரிஸ்ட் பேமிலி” இயக்குநர்

‘டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அணஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார்.;

Update:2025-08-27 20:51 IST

நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமவுலி என பலரும் பாராட்டினார்கள். இந்தப் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.

இந்நிலையில், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இவர் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக மோனிஷா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்குகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்