'அம்...ஆ' படத்தின் டிரெய்லர் வெளியீடு

தாமஸ் செபாஸ்டியன் இயக்கிய 'அம்...ஆ' திரைப்படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2025-04-14 07:28 IST

சென்னை,

அம்...ஆ என்பது தாமஸ் செபாஸ்டியன் இயக்கிய மலையாள மர்மத் திரில்லர் நாடகமாகும். இதில் திலீஷ் போத்தன் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தேவதர்ஷினி, மீரா வாசுதேவ், ஜாபர் இடுக்கி, முத்துமணி மற்றும் அலென்சியர் லே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கவிபிரசாத் கோபிநாத் திரைக்கதை எழுதி காபி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் விசாரணை கோணத்தில் தாய்மையை கொண்டாடும் படமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற 18-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்