''வில்லியாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல'' - நடிகை உதய பானு
''திரிபநாதரி பார்பரிக்'' என்ற படத்தில் உதய பானு நடித்துள்ளார்.;
சென்னை,
2000களின் முற்பகுதியில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் உதய பானு. திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, திரையுலகில் இருந்து விலகி இருந்த அவர், தற்போது ''திரிபநாதரி பார்பரிக்'' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் உதய பானு முக்கிய வில்லியாக நடிக்கிறார். ஒரு நேர்காணலில் பேசிய உதய பானு, இன்றைய காலகட்டத்தில் வில்லியாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல என்றும், தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவேன் எனவும் கூறினார்.
மோகன் ஸ்ரீவத்சா இயக்கி இருக்கும் இப்படம் வருகிற 22-ம் தேதி வெளியாக உள்ளது.