நடிகையுடன் சுற்றும் விஜய் வர்மா: தமன்னாவின் பரபரப்பு பதில்

நடிகை தமன்னாவின் முன்னாள் கணவர் விஜய் வர்மா இன்னொரு நடிகையுடன் சுற்றித் திரிகிறார்.;

Update:2025-08-28 11:12 IST

மும்பை,

பால் நிற மேனி நடிகை என்று வர்ணிக்கப்படும் தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த சூழ்நிலையில் காதல் முறிந்தது.

தற்போது தமன்னா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சூழலில், நடிகை பாத்திமா சனா சேக் உடன் விஜய் வர்மா சுற்றித் திரிகிறார். இருவரும் காதலிப்பதாக கிசுக்கப்படுகிறது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னாவிடம், ‘உங்கள் முன்னாள் காதலர் இன்னொரு நடிகையுடன் சுற்றித்திரிகிறாராமே..' என்று கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் அலட்டிக் கொள்ளாத தமன்னா, ‘யார் எப்படி போனாலும் எனக்கென்ன..?' என்று சிரித்தபடி கூறி சென்று விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்