மீண்டும் இணைந்த விஷால் - சுந்தர் சி கூட்டணி

நடிகர் விஷால் - இயக்குநர் சுந்தர் சி கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;

Update:2025-11-03 21:32 IST

நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு இறுதிகட்ட நிலையில் இள்ளது. இதனை முடித்துவிட்டு விஷால் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. சுந்தர்.சி. இயக்கத்தில் ஆம்பள, மத கஜ ராஜா, ஆக்‌ஷன் படங்களில் விஷால் நடித்துள்ளார்.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில், தமன்னா மற்றும் கயாடு லோகர் கதாநாயகிகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிகிறது.

 இதற்கான புரோமோ வீடியோ ஒன்றையும் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, இந்த புரோமோவை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.

இப்படத்தினை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விஷால் படத்தினை முடித்துவிட்டு ரஜினி படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி. இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்