''அசோகாவில் அஜித்தின் கதாபாத்திரம் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது'' - விஷ்ணு மஞ்சு

அசோகாவில் அஜித், சுஷிமா என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார்.;

Update:2025-07-05 10:40 IST

சென்னை,

தற்போது கண்ணப்பாவில் நடித்ததற்காக கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் மஞ்சு விஷ்ணு, கடந்த 2001-ம் ஆண்டு சந்தோஷ் சிவன் இயக்கிய ''அசோகா'' திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் தனக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக கூறினார்.

அவர் கூறுகையில், ''அஜித் , ஷாருக்கானுடன் ''அசோகா''வில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது அவருடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவரிடம் நான், 'அண்ணா' நீங்கள் இப்படி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டு அமைதியாக இருந்தார்'' என்றார்.

அசோகாவில், அஜித் சுஷிமா என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், இந்தப் படத்தில், கரீனா கபூர், டேனி டென்சோங்பா மற்றும் ராகுல் தேவ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்