''நெல்சனிடம் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்'' - விஜய் சேதுபதி

நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் பற்றி விஜய் சேதுபதி பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.;

Update:2025-08-31 08:42 IST

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதி இப்பொழுது தமிழ் சினிமாவில் அனைவரும் ரசிக்கும் உச்ச நடிகராக உள்ளவர். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் கடைசியாக ''தலைவன் தலைவி'' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ. 100 கோடி வசூலித்தது.

அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெய்ன்' படத்திலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் பற்றி அவர் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில்,

''நெல்சனின் ரைட்டிங் ஸ்டைல் எனக்குப் ரொம்ப பிடிக்கும். அவரது படங்களில் இருக்கும் கதாபாத்திரங்கள் மிகவும் தனித்துவமாக இருக்கும். நான் ஜெயிலரை 6 முதல் 8 முறை பார்த்திருக்கிறேன். எனக்கு ஜெயிலரை மிகவும் பிடிக்கும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்