’அவருடன் புகைப்படம் எடுத்தபோது...சொல்ல வார்த்தைகளே இல்லை’ - ராஷி கன்னா

தற்போது ராஷி கன்னா ‘உஸ்தாத் பகத் சிங்’-ல் நடித்து வருகிறார்.;

Update:2025-12-20 19:08 IST

சென்னை,

பிரபல நடிகை ராஷி கன்னா, சமீபத்தில் பவன் கல்யாணுடன் எடுத்திருந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் வைரலானநிலையில், அதை பற்றி ஒரு நேர்காணலில் சுவாரசியான விஷயங்களை பகிர்ந்தார். அவர் பேசுகையில்,

’ஒரு புகைப்படத்திற்காக பவன் கல்யாண் சாரை சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை. அதனால் ஆசை இருந்தும் அதை பற்றி அவரிடம் கேட்டதில்லை. ஆனால் அவரே வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, அதை சொல்ல வார்த்தைகளே இல்லை’ என்றார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தெலுசு கடா. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங்கில் நடித்து வருகிறார். நட்சத்திர இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இது ஏப்ரலில் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்