"கருப்பு" படத்தின் ரிலீஸ் எப்போது.. வெளியான தகவல்

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன,;

Update:2025-10-30 22:35 IST

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று, ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதற்கிடையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்திலிருந்து முதல் பாடலான காட் மோட் (God Mode) என்ற பாடல் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கருப்பு படம் அடுத்த ஆண்டு (2026) குடியரசு தின விடுமுறையையொட்டி ஜனவரி மாதம் 23ந் தேதி வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்