’மங்காத்தா’ ரீ-ரிலீஸை தள்ளிப்போட சொல்லாதது ஏன்? - 'திரௌபதி 2' இயக்குனர் விளக்கம்

மங்காத்தா படம் வருகிற 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.;

Update:2026-01-21 07:25 IST

சென்னை,

விஜய்யின் ’தெறி’ படம் வருகிற 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக இருந்தது. அதே நேரத்தில் அன்று மோகன்.ஜி யின் ’திரௌபதி 2’ படம் ரிலீஸ் ஆக இருந்தது. இதனால், தெறி தயாரிப்பாளர் தாணுவிடம், 'திரௌபதி 2' இயக்குனர் மோகன்.ஜி, தெறி ரீ-ரிலீஸை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை ஏற்று ’தெறி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.

அதே சமயம், மங்காத்தா படமும் 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குனர் மோகன்.ஜியிடம், மங்காத்தா’ ரீ-ரிலீஸை தள்ளிப்போட சொல்லாதது ஏன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,

"மங்காத்தாவை தள்ளிப்போட சன்பிக்சர்ஸை ஏன் டேக் செய்யவில்லை என்று பலர் என்னிடம் கேட்டார்கள். முதலில் சன்பிக்சர்ஸ்தான் ஜனவரி 23-ம் தேதி ’மங்காத்தா’ ரிலீஸை அறிவித்தனர். அதன்பிறகு நாங்கள் பொங்கல்-னு சொல்லிட்டு பின்பு 23-ம் தேதியை அறிவித்தோம். நாங்கள் அறிவித்த உடனே பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த தெறி 23-ம் தேதிக்கு தள்ளிப்போனது.

தாணு சார் எளிதில் அணுகக்கூடியவராக இருந்ததால், அவரிடம் எடுத்து சொன்னோம். சார் இந்தமாதிரி கஷ்டப்பட்டு இந்த பட்ஜெட்டில் பண்ணிருக்கோம், நீங்களும் வந்தீங்கள் என்றால் பெரிய திரைகள் எங்களுக்கு கிடைக்காது . 2 பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் சுலமாக தொழில்நுட்பரீதியாக உள்ள நல்ல தியேட்டர்கள் எல்லாம் அவர்களுக்கு போய்விடும் என்றேன்.

அவரும் அதை புரிந்துகொண்டு, தனக்கு நஷ்டமானாலும் பரவாயில்லை என்று தெறி ரீ-ரிலீஸை பெரிய மனதோடு ஒத்திவைத்தார்’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்