3-வது முறையாக ஒரே நடிகருடன் இணையும் கிரித்தி சனோன்?

லக்சுமன் உடேகர் இயக்கிய 'சாவா' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.;

Update:2025-04-27 15:52 IST

மும்பை,

பிரபல பாலிவுட் இயக்குனர் லக்சுமன் உடேகர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'சாவா' படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தையடுத்து, இவர் ஒரு காதல் கதையை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தில், தான் இயக்கிய 'லூகா சுப்பி' படத்தில் நடித்திருந்த கார்த்திக் ஆர்யன் மற்றும் கிரித்தி சனோன் ஆகியோரை நடிக்க வைக்க அவர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

லக்சுமன் உடேகர் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான படம் 'லூகா சுப்பி'. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு, கிரித்தி சனோன், 'மிமி' படத்தில் லக்சுமன் உடேகருடன் பணியாற்றினார். இதில் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

பின்னர், கார்த்திக் ஆர்யனுடன் தெலுங்கில் பிளாக்பஸ்டரான 'ஆலா வைகுந்தபுரமுலோ'(வைகுண்டபுரம்) படத்தின் இந்தி ரீமேக்கான 'ஷேஜாதா' படத்தில் கிரித்தி நடித்தார்.

இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் இயக்குனர் லக்சுமன் உடேகர் இயக்கத்தில் மற்றும் கார்த்தி ஆர்யனுக்கு ஜோடியாக கிரித்தி நடிக்கும் 3-வது படமாக இது இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்