''அனுஷ்காவின் விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள்'' - ''காதி'' பட இயக்குனர்
''காதி'' படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
''காதி'' படத்தின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை கவர வந்துள்ளார் அனுஷ்கா. இந்த படம் பாக்ஸ் ஆபீஸை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இதில் விக்ரம் பிரபு , ஜகபதி பாபு மற்றும் சைதன்யா ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று இப்படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது இப்படத்தின் இயக்குனர் கிருஷ், அனுஷ்காவின் நடிப்பு குறித்து சில அற்புதமான விஷயங்களை கூறினார்.
அவர் கூறுகையில், "இதுவரை பார்க்காத அனுஷ்காவை ''காதி'' காட்டும். நீங்கள் அவரது விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள்," என்றார்.