'குடும்பஸ்தன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம்!

மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.;

Update:2025-03-02 15:10 IST

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 7-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்