ஓடிடியில் வெளியானது ஜி.வி பிரகாஷின் ’பிளாக்மெயில்’

இப்படம் சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.;

Update:2025-10-31 01:39 IST

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 'பிளாக்மெயில்' என்ற படம் வெளியானது.

இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சன்நெக்ஸ்டி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்