காளி வெங்கட் நடித்த "மெட்ராஸ் மேட்னி" ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு

‘மெட்ராஸ் மேட்னி’ படம் வரும் ஜூலை 4 ம் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.;

Update:2025-06-27 19:43 IST

அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் 'என்னடா பொழப்பு இது' எனத்தொடங்கும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படத்தையும் படக்குழுவையும் பாராட்டினர்.

இந்நிலையில் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஓ.டி.டி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 4 ம் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்