25 வயது பெண்களை குறி வைத்து...கொடூரமாக கொலை செய்யும் ஸ்மைலி கில்லர்- சஸ்பென்ஸ் திரில்லரை எதில் பார்க்கலாம்?
சமீப காலமாக திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் ஓடிடியில் அதிகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகின்றன.;
சென்னை,
மக்கள் தற்போது வெவ்வேறு வகை படங்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் படமும் அதே வகையைச் சேர்ந்ததுதான். படத்தின் பெயர் இறைவன்.
அகமது இயக்கிய இந்தப் படத்தில் நயன்தாரா, ரவி மோகன், ராகுல் போஸ் மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஜி ஆகியோர் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போது நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
அர்ஜுன் ( ரவிமோகன்) ஒரு போலீஸ் அதிகாரி. பிரம்மா என்ற சைக்கோ கொலையாளி 25 வயது பெண்களை கொடூரமாக கொலை செய்கிறான். அவர்களின் உடலில் ஸ்மைலி அடையாளங்களை விட்டுச் செல்கிறான். அர்ஜுன், சைக்கோ கொலையாளியை எப்படிப் பிடித்தான்..? ஏன் அந்தக் கொலைகளைச் செய்கிறான்? என்பதுதான் படம்.