இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.;

Update:2025-09-25 13:09 IST

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள் ஓடிடி தளங்கள் 

சுந்தர காண்டா

ஜியோ ஹாட்ஸ்டார்

தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்

பிரைம் வீடியோ ரெண்ட், ஆப்பிள் டீவி பிளஸ்

ஹிருதயப்பூர்வம்

ஜியோ ஹாட்ஸ்டார்

ஓடும் குதிரை சாடும் குதிரை

நெட்பிளிக்ஸ், சிம்பிலி சவுத்

சுமதி வளவு

ஜீ5

சுந்தர காண்டா

வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் ஸ்ரீதேவி விஜய்குமார் மற்றும் விருத்தி வகானி ஆகியோர் நடித்துள்ள படம சுந்தரகாண்டா. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த 23ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' படம் வெளியானது. இதனை மேட்ஷாக்மேன் இயக்கிய இந்த படத்தில், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின், எபோன் மோஸ்-பச்ராச் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 23ந் தேதி பிரைம் வீடியோ ரெண்ட், ஆப்பிள் டீவி பிளஸ் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.

ஹிருதயப்பூர்வம்

பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன் லால், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள படம் ஹிருதயப்பூர்வம். இதில் பிரேமலு புகழ் காமெடி நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை 26ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ஓடும் குதிரை சாடும் குதிரை

அல்தாப் சலீம் இயக்கத்தில் பகத் பாசில், கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ள படம் ஓடும் குதிரை சாடும் குதிரை. இந்த படத்தில், ரேவதி பிள்ளை, லால், வினய் போர்ட், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் மற்றும் சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடியில் வெளியாக உள்ளது.

சுமதி வளவு

விஷ்ணு சசி சங்கர் இயக்கிய திகில் திரைப்படம் சுமதி வளவு. இதில், அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன், கோகுல் சுரேஷ், பாலு வர்கீஸ், சைஜு குருப், ஷிவதா, தேவானந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்