நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாராவின் 'டெஸ்ட்' படம்

டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.;

Update:2025-01-23 13:04 IST

'தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் சசிகாந்த இந்த படத்தை தயாரிக்கிறார். மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், தற்போது 'டெஸ்ட்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே சசிகாந்த் தயாரித்த 'ஜகமே தந்திரம்' படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்