'மதராஸி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'மதராஸி' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.;

Update:2025-09-26 13:45 IST

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மதராஸி. இதனை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதராஸி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்