சித்தார்த்தின் ''3பிஎச்கே'' படம் ஓடிடியில் ரிலீஸாவது எப்போது ?

''3பிஎச்கே'' படம் ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது.;

Update:2025-07-29 09:41 IST

சென்னை,

ஸ்ரீ கணேஷ் இயக்கிய சித்தார்த்தின் சமீபத்திய குடும்ப படமான 3பிஎச்கே, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற 1-ம் தேதி(ஆகஸ்ட் 1) முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் படம் அதிக பார்வையாளர்களை சென்றடைய உள்ளது.

இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்