இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்...எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்? - லிஸ்ட் இதோ
இந்த வாரம் எந்தெந்த படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன என்பதை காணலாம்.;
திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகியுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.
திரைப்படம் | ஓடிடி தளம் | தேதி |
| மாஸ்க் | ஜீ5 | ஜனவரி 9 |
| பல்டி | அமேசான் பிரைம் | ஜனவரி 9 |
| யெல்லோ | அமேசான் பிரைம் | ஜனவரி 7 |
ஜிக்ரிஸ் | சன் நெக்ஸ்ட் | ஜனவரி 6 |
கான்ஸ்டபிள் கனகம் 2 | ஈ டி வி வின் | ஜனவரி 8 |
சைலன்ட் சகிரீம்ஸ் | சன் நெக்ஸ்ட் | ஜனவரி 8 |
ராதேயா | சன் நெக்ஸ்ட் | ஜனவரி 8 |
மகாசேனா | சிம்பிளி சவுத் | ஜனவரி 9 |
அங்கம்மாள் | சன் நெக்ஸ்ட், சிம்பிளி சவுத் | ஜனவரி 9 |
அகண்டா 2 | நெட்பிளிக்ஸ் | ஜனவரி 9 |
மாஸ்க்
கவின் , ருஹானி ஷர்மா, ஆன்ட்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் , ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல்வாதியின் ரூ.440 கோடி பணத்தினை கடத்தும் கும்பலை பற்றியும் , அவர்கள் பணத்தினை திருட காரணம் என்ன என்பதையும் அறியும் ஒரு துப்பறியும் கதை தான் மாஸ்க். இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
பல்டி
ஷேன் நிகம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படம் பல்டி. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லையோர கிராமத்தில் வசிக்கும் நான்கு இளம் கபடி வீரர்களின், வாழ்க்கை பற்றிய கதைக்களம் இது. பால்டி திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
யெல்லோ
பிக் பாஸ் பூர்ணிமா ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘யெல்லோ’ திரைப்படம் காதல், காமெடி மற்றும் உணர்ச்சிப் பெருக்கங்களை சேர்த்திருக்கும் படமாக அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
ஜிக்ரிஸ்
தெலுங்கில் வெளிவந்த காமெடி மற்றும் ரோடு டிரிப் திரைப்படமான ‘ஜிக்ரிஸ்’ சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
கான்ஸ்டபிள் கனகம்
நடிகை வர்ஷா பொல்லம்மா நடிப்பில் உருவாகிய ‘கான்ஸ்டபிள் கனகம்’ என்ற திரில்லர் வெப் தொடர், தனது இரண்டாவது சீசனுடன் நேற்று ஈ டி வி வின் ஓடிடியில் ரிலீஸ் ஆகி, ஓடிடி பிரியர்களை கவர்ந்து வருகிறது.
சைலன்ட் சகிரீம்ஸ்: (தி லாஸ்ட் கிரல்ஸ் ஆப் தெலுங்கானா)
உண்மையான கிரைம் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட டாக்குமென்டரி திரைப்படமான ‘சைலன்ட் சகிரீம்ஸ்: தி லாஸ்ட் கிரல்ஸ் ஆப் தெலுங்கானா’ இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
ராதேயா
கன்னடத்தில் வெளிவந்த ‘ராதேயா’ கிரைம் மற்றும் திரில்லர் கதாபாத்திரம் கொண்ட திரைப்படம் நேற்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இது கதையின் திருப்பங்கள் மற்றும் அதிரடி காட்சிகளால் ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாசேனா
விமல், யோகி பாபு, மஹிமா குப்தா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படமான ‘மகாசேனா’ தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்ற பின்னர் இன்று சிம்பிளி சவுத் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
அங்கம்மாள்
நடிகை கீதா கைலாசம் நடிப்பில் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம், திரைப்பட விழாவில் விருது வென்றது மற்றும் தியேட்டரிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இன்று சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
அகண்டா 2
பாலையா நடிப்பில் வெளியான தெலுங்கு அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘அகண்டா 2’ . முந்தைய பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.