திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் 1000 வெள்ளி தாமரை மலர்களால் அர்ச்சனை
ஆயிரம் தாமரை மலர்கள் மற்றும் ஆயிரம் வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.;
திருவாரூர் மாவட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு மகம் மற்றும் பூரம் நட்சத்திர தினத்தை முன்னிட்டு வீழிநாதர் மற்றும் சுந்தர குஜாம்பிகை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இங்கு மாப்பிள்ளை சுவாமியாக உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர், கார்த்தியாயினி அம்பாளுக்கு மக நட்சத்திர வழிபாடு நடந்தது. ஆயிரம் தாமரை மலர்கள் மற்றும் ஆயிரம் வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
சுந்தர குஜாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பூரம் நட்சத்திர வழிபாடு நடந்தது. இதில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மக நட்சத்திர வழிபாட்டுக்குழு செயலாளர் சீதாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.