ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பொன்னாலம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update:2025-12-11 10:58 IST

ஸ்ரீகாளஹஸ்தி நகர வீதிகளில் ஏழு கங்கையம்மன்கள் ஊர்வலமாக சென்ற காட்சி.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று அதிகாலை கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் செய்யப்பட்டன. அபிஷேகம் முடிந்ததும் அம்மனுக்கு எதிராக மகாகும்பம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா நெய்வேத்தியம், மகாபலி கொடுக்கப்பட்டு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து சலவை தொழிலாளர்கள் களிமண்ணாமல் செய்யப்பட்ட ஏழு கங்கையம்மன்கள், மஞ்சள் உருண்டைகளை கோவில் கமிட்டியினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து திருவிழா கமிட்டியினர் ஏழு கங்கையம்மன்களை அந்தந்தப் பகுதிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று ஓரிடத்தில் எழுந்தருளச் செய்தனர். அந்தந்த இடங்களில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து, பலிபீடத்தை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழாவை தொடங்கினர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பொன்னாலம்மன், காந்திவீதியில் அங்கம்மன், கொத்தப்பேட்டை பகுதியில் புவனேஸ்வரி அம்மன், பிராமண தெருவில் கருப்பு கங்கையம்மன், சந்தை மைதானத்தில் மூலஸ்தான எல்லையம்மன், பேரி வாரி மண்டபத்தில் முத்தியாலம்மன், சன்னதி தெருவில் அங்காளம்மன் என ஏழு கங்கையம்மன்களும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்