சென்னையில் 2 ஆயிரத்து 5 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.;

Update:2025-08-31 23:21 IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர்.

இதேபோல் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. முதல் நாளில் இருந்தே சிலைகள் கரைக்கப்படுகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன. பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

அந்த வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 பகுதிகளில் கடலில் கரைக்கப்பட்டன. சென்னையில் இரவு 9 மணி நிலவரப்படி 2 ஆயிரத்து 5 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்