சபரிமலையில் புதிய அன்னதான திட்டம் - இன்று முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் மதிய விருந்து
பொது மக்களின் பங்களிப்புடன் சபரிமலையில் புதிய அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.;
திருவனந்தபுரம்,
மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவசம்போர்டு நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்தில் கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொது மக்களின் பங்களிப்புடன் சபரிமலையில் புதிய அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சன்னிதானத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்பட உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.