திருப்பதி ஸ்ரீபேடி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

ஆஞ்சநேயர் ஸ்வாமியின் மூலவர் திருமேனிக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.;

Update:2025-12-14 15:34 IST

பேடி ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தின்போது தரிசனம் செய்த பக்தர்கள்

கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் ஸ்வாமியின் மூலவர் திருமேனிக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான சுகாதார அதிகாரி டாக்டர் மதுசூதன், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்