பரமத்தி வேலூர்: கோவில்களில் பெளர்ணமி சிறப்பு பூஜை

பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து பஞ்சாரத்தியுடன் ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது.;

Update:2025-09-07 16:19 IST

சிறப்பு அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள பெத்தாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள ப்ரித்தியங்கிரா தேவிக்கு ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வர மிளகாய் யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் ப்ரித்தியங்கரா தேவிக்கு உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து பஞ்சாரத்தியுடன் ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் மற்றும் பழைய காசிவிஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி, மாவுரெட்டி வேதநாயகி சமேத பீமேஸ்வரர், கோப்பணம்பாளையம் பரமேஷ்வரர், மாசாணியம்மன், அரசாயி அம்மன், வேலூர் எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வரர்,

வல்லப விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள பானலிங்கேஸ்வரர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள மருந்தீஸ்வரர், நன்செய் இடையாறு மாரியம்மன், வேலூர் மாரியம்மன், பேட்டை புது மாரியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் பால ஐயப்பன், வேலூர் மற்றும் பேட்டையில் உள்ள பகவதியம்மன், நன்செய் இடையாற்றில் உள்ள கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி மற்றும் நன்செய் இடையாற்றில் உள்ள நாகாத்தம்மாள், வேலூர் செட்டியார் தெருவில் உள்ள பால ஐயப்பன் உள்ளிட்ட கோவில்களில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்