கன்னியாகுமரி திருப்பதி கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக திருப்பதியில் இருந்து ௭ ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.;

Update:2025-04-13 15:33 IST

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் அமைந்து உள்ளது.

இந்த கோவிலில் தமிழ் புத்தாண்டுதின கொண்டாட்டம் நாளை (14-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத தரிசனம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காய்கனிகள் படைக்கப்பட்டு சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் தொடர்ந்து இரவு 8 மணி வரை சர்வ தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்படுகிறது. மேலும் 11.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இது தவிர மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து 7 ஆயிரம் லட்டுகள் கன்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரி வந்து சேர்ந்தன. இந்த லட்டுகள், தமிழ் புத்தாண்டையொட்டி நாளை முதல் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்